Daily TN Study Materials & Question Papers,Educational News

10th Science - Half Yearly Question Paper 2024 | Model, Original With Answer key

10th Science - Half Yearly Question Paper 2024 | Model, Original With Answer key 

Science

10th Science - Half Yearly Important Questions 2024 | Kalvi Arts YouTube Channel - PDF Download Here

10th Science - Half Yearly Model Question paper 2024 -English Medium PDF Download here

10th Science - Half Yearly Model Question paper 2023 -Tamil Medium PDF Download here

10th Science - Half Yearly Exam Original Question paper 2022 - 2023 - English Medium PDF Download here ( Tiruvannamalai  )

10th Science - Half Yearly Exam Original Question paper 2022 -2023 - English Medium PDF Download here ( Krishnagiri )

10th Science - Half Yearly Exam Original Question paper 2022 -2023 - PDF Download here ( Kallakurichi )

10th Science - Half Yearly Exam Original Question paper - English Medium PDF Download here ( Tenkasi )

10th Science - Half Yearly Exam Original Question paper -English Medium PDF Download here ( virudunagar )

10th Science - Half Yearly Exam Original Question paper -( Viruthunagar ) PDF Download here ( Tamil Medium )

10th Science - Half Yearly Exam Original Question paper -( Tiruvannamalai ) PDF Download here ( Tamil Medium )

10th std All District Previous year original and Model Half yearly Exam 2024 Question papers PDF Download Available Here. You can Download printable PDF format for half yearly Exam Original, Model Question paper 2024.

Share:

10th Maths - Half Yearly Question Paper 2024 | Model, Original With Answer key

10th Maths - Half Yearly Question Paper 2024 | Model, Original With Answer key

Maths

10th Maths - Half Yearly Important Questions 2024 - PDF Download Here

10th Maths - Half Yearly Model Question paper 2024 -English Medium PDF Download here

10th Maths - Half Yearly Exam Original Question paper 2022 - 2023 - English Medium PDF Download here ( kallakurichi  )

10th Maths - Half Yearly Exam Original Question paper 2022 -2023 - English Medium PDF Download here ( Tirupatture )

10th Maths - Half Yearly Exam Original Question paper 2022 -2023 - PDF Download here

10th Maths - Half Yearly Exam Original Question paper - English Medium PDF Download here ( Tenkasi )

10th Maths - Half Yearly Exam Original Question paper -Tamil Medium PDF Download here ( virudunagar )

10th Maths - Half Yearly Exam Original Question paper - PDF Download here ( Tamil Medium )

Share:

10th Tamil - Half Yearly Paper 2024|Model, Original With Answer key

10th Tamil - Half Yearly Paper 2024|Model, Original With Answer key 

Tamil

10th Tamil - Half Yearly Important Questions 2024 - PDF Download Here

10th Tamil - Half Yearly original Question paper 2024 - PDF Download here ( Karur )

10th Tamil - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( Madurai, Dindigul )

10th Tamil - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( Tenkasi )

10th Tamil - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( Tirupattur )

10th Tamil - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( virudhunagar )

10th Tamil - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( Tanjavor )

10th Tamil - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( salem

10th std All District Previous year original and Model Half yearly Exam 2024 Question papers PDF Download Available Here. You can Download printable PDF format for half yearly Exam Original, Model Question paper 2024.

Share:

அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினத்தன்று (14.11.2024) காலையில் நடக்கும் கூட்டத்தில் குழந்தைக்களுக்கு இக்கடிதத்தை வாசித்துக்காட்ட வேண்டும் - மாவட்ட ஆட்சியர்.!

 அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினத்தன்று (14.11.2024) காலையில் நடக்கும் கூட்டத்தில் குழந்தைக்களுக்கு இக்கடிதத்தை வாசித்துக்காட்ட வேண்டும் - மாவட்ட ஆட்சியர்.!

அன்புத் தம்பி/தங்கையே!

நான் உங்கள் மாவட்ட ஆட்சியர் பேசுகிறேன், நம் மாவட்டத்திலுள்ள அனைத்து குழந்தை செல்வங்களாகிய உங்களுடன் நேரில் பேசிட ஆவல் ஆனால் அதற்கான அவகாசம் இல்லாத காரணத்தால் இக்கடிதம் மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் எல்லையற்ற மகிழ்ச்சிடைகிறேன். இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் வாழும் உரிமை, வளர்ச்சிக்கான உரிமை பாதுகாப்பு உரிமை, மற்றும் பங்கேற்க்கும் உரிமை உள்ளன,

நம் (மாவட்டத்தின் பெயர்) மாவட்டத்தில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் போன்ற செயல்களை தடுக்கும் வகையில் உங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்க உள்ளேன்.  குறிப்பாக உன்னை எப்படி உன்னாலே பாதுகாக்க முடியும் என்பது அது. யாராவது உன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக செயல்பட முயற்சித்தால் தொடவிடாதே! எதிர்த்து நில்! சத்தமாக கூச்சலிடு! நிறுத்து எனக்கு பிடிக்கவில்லை! உன்னைப்பற்றி சொல்லிவிடுவேன் என்று தைரியமாக சொல்!! உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடு!!. அப்படி யாரேனும் உன்னிடம் தவறாக நடந்தால் உனக்கு நம்பிக்கைக்குரிய பெற்றோரிடமோ, ஆசிரியிரிடமோ, அல்லது நண்பர்களிடமோ சொல்லி உதவி கேள்! அல்லது உங்களுக்கென்று

உதவி செய்ய உருவாக்கப்பட்ட நம் சைல்டு ஹெல்ப்லைன் 1098 என்ற இலவச அவசர தொலைபேசி எண் மூலம் அந்த தகவலை கூறி உதவி கேள், உங்களின் விவரம் ரகசியமாக பாதுகாப்பத்துடன் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான ஆலோசனை வழங்கப்படும். குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர் மீது சட்ட  ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், அதுமட்டுமல்லாமல் அக்குழந்தைக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்பட்டால் விடுதி வசதியும் ஏற்படுத்தி தரப்படும்.

குழந்தைகளாகிய நீங்கள் நம் (மாவட்டத்தின் பெயர்) மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுத்தல் பற்றிய விவரங்களையும் தெரிந்துகொள்வது  மிக அவசியமான ஒன்றாகும் அதன்படி 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும் 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்படுவது,  நடத்த ஏற்பாடு செய்வது,  வற்புறுத்துவது போன்ற செயல்கள் இந்திய குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006 படி தண்டனைக்குரிய செயலாகும் எனவே உங்களை பாதுகாத்துக்கொள்ள இதுப்பற்றிய தகவல் உங்களுக்கு தெரிந்தாலோ இந்த கொடுஞ்செயல் உங்களுக்கு நடக்க இருந்தாலோ குழந்தைகளுக்கான 24 மணி நேர இலவச அவசர தொலைபேசியான சைல்டு லைன் 1098 க்கு தகவல் தெரிவித்து உதவிக் கேட்கலாம்.

தற்போதைய சூழலில் போதைக்கு அடிமையாகும் நபர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் நீங்கள் எப்பொழுதும் எந்த விதமான போதைக்கும் அடிமையாக கூடாது. போதை "எனக்கு வேண்டாம் நமக்கும் வேண்டாம்" என்ற உறுதியோடு செயல்பட வேண்டும். உங்கள் உடலை உறுதியாக ஆரோக்கியமான வைத்துக்கொள்ள உடல்பயிற்சி செய்யுங்கள். 

 இந்த உலகம் அனைவருக்குமானது எனவே உங்கள் வகுப்பை சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவமிக்க வகுப்பறையாக மேம்படுத்தவேண்டும்.

நம் (மாவட்டத்தின் பெயர்) மாவட்டதில் உங்களுக்காக வந்து உதவி செய்ய நானும் மற்ற குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அதிகாரிகளும் தயாராகக் இருக்கிறோம் இந்த தகவலை நீங்கள் தவறாமல் உங்களின் நண்பர்களுக்கும் தெரிவிப்பாய் என்று நம்பிகின்றேன். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு நம் மாவட்டத்தை குழுந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நலமிக்க மாவட்டமாக உருவாக்கிடுவோம்.

இப்படிக்கு தங்கள் அன்புள்ள

மாவட்ட ஆட்சியர்

Share:

பள்ளி மாணவர்களிடம் ஒழுங்கீனமாக நடப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களிடம் ஒழுங்கீனமாக நடப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களிடம் ஒழுங்கீனமாக நடப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை மற்றும் துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் எச்சரிக்கை!

Share:

அனைத்து தேர்வுகளிலும் திருக்குறள் கேள்வி கட்டாயம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்..!

 அனைத்து தேர்வுகளிலும் திருக்குறள் கேள்வி கட்டாயம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்..!

தமிழகத்தில் அனைத்து தேர்வுகளிலும் திருக்குறள் தொடர்பான வினாக்கள் கேட்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ராம்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அதிகாரங்களில் உள்ள அனைத்து திருக்குறள்களையும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டத்தில் சேர்க்க 2016-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், தமிழக அரசு 2017-ல் அரசாணை வெளியிட்டது. இருப்பினும், அந்த அரசாணை பெயரளவில் மட்டுமே உள்ளது. மொத்தம் 30 திருக்குறள் முதல் 60 திருக்குறள்கள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பாடத் திட்டத்தில் திருக்குறள் மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பொருள் கொடுக்கப்படவில்லை. மாணவர்கள் தேர்வுகளில் திருக்குறள் பெயரளவில் தான் இடம் பெறுகின்றன.

எனவே, தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டத்தில் திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலின் அதிகாரங்களில் உள்ள திருக்குறள்களை பொருளுடன் இடம் பெறச் செய்யவும் தேர்வுகளில் திருக்குறள் சம்பந்தமான கேள்விகள் இடம் பெறச்செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "அனைத்து வகுப்புகளுக்கும் திருக்குறள் பாடமாக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் திருக்குறள் மட்டுமே பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருக்கும், அதற்கான விளக்கத்தை உரைகளில் தேடி படிக்கும் வகையில் இருந்தது. தற்போது திருக்குறள், அதன் பொருள் விளக்கம், சொல் விளக்கம் போன்ற அனைத்தும் சேர்த்து பாடப் புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ளன. தேர்வுகளிலும் திருக்குறள் தொடர்பான வினாக்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share:

எஸ்சி, எஸ்டி, பின்னடைவு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: டிஎன்பிஎஸ்சி..!

எஸ்சி, எஸ்டி, பின்னடைவு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: டிஎன்பிஎஸ்சி..!

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

தோ்வாணைய செயலா் ச.கோபாலசுந்தரராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தோ்வு மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், 50 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், நிகழாண்டு குரூப் 1 தோ்வு மூலம் 12 குறைவு இடங்களும், குரூப் 2 தோ்வு மூலம் 135 இடங்களும், குரூப் 4 தோ்வு மூலம் 434 இடங்களும் என மொத்தம் 581 பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்பப் பணியிடங்களிலும் பின்னடைவு காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

8th second Mid Term Question Paper 2024

8th second Mid Term Question Paper 2024

8th second mid term question paper 2024,8th Std second mid term question paper 2024,8th Standard second mid term question paper 2024,8th second mid term question paper 2024,8th standard question paper with answer, 8th second mid term question paper 2024 ,8th standard second mid-term question paper, 8th standard second term question paper, 8th standard social science second term question paper, 8th second mid term test in tamil

8th second Mid-Term Question Paper 2024

Tamil

8th Tamil - second Mid term Question Paper 2024 - Download Here

English

8th English - second Mid term Question Paper 2024 - Download Here

8th Maths - second Mid term Question Paper 2024 - Download Here

8th Science - second Mid term Question Paper 2024 - Download Here

Social science

8th Social science - second Mid term Question Paper 2024 - Download Here

பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுமதி..!

பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுமதி..!

பள்ளிக்கு சரியாக வராமல் வேறொரு ஆசிரியர் மூலம் பாடம் நடத்தும் விவகாரங்களில் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் நிலை, கட்டமைப்பு வசதிகள், நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர்.

அப்போது கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், முறையாக ஆய்வு செய்யாத அலுவலர்களின் விவரத்தையும் பொதுவெளியில் வெளியிட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தர்மபுரி அரூர் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட ராமியாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கே.பாலாஜி பணிக்கு வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பியது ஆய்வில் தெரியவந்தது.

Share:

உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகள் - அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க நடவடிக்கை..!

உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகள் - அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க நடவடிக்கை..!

ஜேஇஇ, நிட் தேர்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக நடப்பு ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்ஒருபகுதியாக இந்த மாதம் முதல் உயர்கல்வி படிப்புகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி நடப்பு மாதம் ஜேஇஇ முதன்மைத் தேர்வு, தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனத் தேர்வு (NID- NATIONAL INSTITUTE OF DESIGN) ஆகியவற்றுக்கான விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு நவம்பர் 22-ம் தேதி வரையும், நிட் தேர்வுக்கு டிசம்பர் 2-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் மற்றும் தகுதிகள் உட்பட கூடுதல் விவரங்கள் இதனுடன் சேர்த்து அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து மேற்கண்ட போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்களை பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு தெரியப்படுத்தி தகுதியானவர்கள் விண்ணப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Share: